அனைத்து பள்ளிகளிலும் தரமான சமையலறை அவசியம்! | Kalvimalar - News

அனைத்து பள்ளிகளிலும் தரமான சமையலறை அவசியம்! ஆகஸ்ட் 08,2022,13:28 IST

எழுத்தின் அளவு :

நரிக்குடி: மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் சமையல் அறை சேதம் அடைந்து காணப்படுகின்றன. திறந்தவெளியில் சமையல் செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளதால் சமையலர்கள் சிரமப்படுகின்றனர். தரமான சமையலறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.



அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவை சமையல் செய்ய சமையலறை கட்டப்படுகிறது. இதில் ஒரு ஸ்டோர் ரூம், அடுப்பங்கறை, ஒரு வரண்டா இருக்கும். ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. இதில் கமிஷன், ஒப்பந்ததாரர் லாபம் போக மீதித்தொகையில் தரம் இல்லாமல் கட்டடம் கட்டப்படுகிறது. குறுகிய காலத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் சேதம் அடைகிறது.



மேற்கூரை காரை இடிந்து விழுகிறது. மழை நேரங்களில் கசிவு ஏற்பட்டு பொருட்கள் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் கட்டடம் இடிந்து சமையல் செய்ய முடியாத நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலான இடங்களில் சமையல் கூடங்களை சீரமைக்காமல் கண்டும் காணாமல் விட்டு விடுவதால் திறந்தவெளியில் சமையல் செய்கின்றனர்.



நரிக்குடி நாலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்தவெளியில் சமையல் செய்கின்றனர். ஆடி மாதம் காற்றுக்கும், மழை நேரங்களிலும் சமையல் செய்ய முடியாமல் சமையலர்கள் திணறுகின்றனர். திறந்தவெளியில் சமையல் செய்யும்போது தேவையில்லாத பொருட்கள் விழலாம். மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் திறந்தவெளி பயன்பாடு கூடாது என அரசு உத்தரவிட்டது. வெளியில் விறகு அடுப்புகள் எரிக்கும் போது, காற்றுக்கு தீப்பொறிகள் பறந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.



சில இடங்களில் சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றனர். திறந்த வெளியில் கேஸ் பயன்படுத்துவதால் அதிகம் வீணாகிறது. மேலும் ஆக. 15ல் இருந்து காலை உணவு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மகளிர் குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சமையலறைகள் பயன்பாடு அதிகரித்து வருவதால், தரமான சமையலறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



குறிப்பாக மொட்டை மாடி மேல் தளத்தில் தட்டோடு பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டோடு இல்லாததால் மழை, வெயிலுக்கு கட்டடம் விரைவில் சேதம் அடைவதாக புகார் தெரிவித்தனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us