கோவை: கனமழை காரணமாக கேவை, நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்
தென்மேற்கு பருவ கேரளமாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனைதொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 3ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
ஆடிப்பெருக்கு திருப்பத்தூரில் விடுமுறை
3ம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.