சென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா? இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

சென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா? இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி?ஜனவரி 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் என்பது இந்தியாவைப் பொறுத்த வரை தற்போதைய கால கட்டத்தில் மிகச் சிறந்த ஒரு படிப்பு என்பதில் சந்தேகமில்லை. வேகமாக வளரும் உடல் நலத் துறையில் வாய்ப்புகளும் அதிகம். தற்போது மருத்துவச் சுற்றுலா என்ற பெயரில் வளர்க்கப்படும் வெளிநாட்டு நோயாளிகளின் வருகையும் இத்துறையை நன்றாக மேம்படுத்தி வருகிறது.

ஹாஸ்பிடல் மேனேஜ்மென்டில் ஒரு ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இதில் நீங்கள் பட்ட மேற்படிப்பு படிக்கலாம். இதில் நுழைவுத் தேர்வு மூலமாகவே நீங்கள் சேர முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us