ஆசிரியர் கவுன்சிலிங் அறிவிப்புஜூலை 04,2022,22:37 IST
சென்னை: முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாகவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கும் &'கவுன்சிலிங்&' தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு, நகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு வழியே நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங், &'எமிஸ்&' என்ற கல்வி தகவலியல் மேலாண்மை அமைப்பின் வழியே நடத்தப்படும்.
பதவி உயர்வு பெறுவோரின் பட்டியல், வரும் 11ம் தேதி வெளியிடப்படும். பட்டியலில் இடம் பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, வரும் 12ம் தேதியும்; உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, வரும் 13ம் தேதியும் பதவி உயர்வு வழங்கப்படும். இடைநிலை ஆசிரியர்களில் இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக, வரும் 14ம் தேதி பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.