நர்சிங், துணை மருத்துவ படிப்புக்கு.. அரசு மனசு வைக்குமா | Kalvimalar - News

நர்சிங், துணை மருத்துவ படிப்புக்கு.. அரசு மனசு வைக்குமாஜூலை 04,2022,22:32 IST

எழுத்தின் அளவு :

பொள்ளாச்சி: நர்சிங் படிக்கலாம் என்ற கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, தமிழக முதல்வர் மனது வைக்க வேண்டும். இடவசதி உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பை வெளியிட்டால், ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு நர்சிங் படிப்பு எளிதாக கிடைக்கும்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்காக, பழைய நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலகோபாலபுரம் வீதி பள்ளி இடம் வழங்கப்பட்டது.பழைய நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்ட இடத்தில், அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல ஆண்டு காலமாக நர்சிங் கல்லுாரி வரும் என கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
எப்போது வரும்?பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நர்சிங் கல்லுாரி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மாணவியர், நர்சிங் படிப்பு படிக்க கோவைக்கு செல்ல வேண்டியதுள்ளது. பொள்ளாச்சியில் அரசு சார்பில், நர்சிங் கல்லுாரி அமைந்தால், மாணவர்கள் இங்கேயே படிக்க முடியும்.அரசு நர்சிங் கல்லுாரி அமைவதால், பயிற்சி மாணவியர், அரசு மருத்துவமனையில் செவிலியருடன் இணைந்து பணியாற்றுவதால், செவிலியர் பற்றாக்குறை தவிர்க்க முடியும். இதற்கான இடவசதி உள்ள சூழலில், நர்சிங் கல்லுாரி அமைக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.அரசு கவனிக்குமா?பொள்ளாச்சியில், நர்சிங் கல்லுாரி அமைக்க வேண்டும் என அரசுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில், ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்தாண்டு வரும், அடுத்தாண்டு வந்து விடும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மாணவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.நர்சிங் படிக்கலாம் என்ற கனவுகளோடு இருக்கும் மாணவர்கள், தனியார் கல்லுாரிகளில் கட்டணம் செலுத்த முடியாமல், அரசு கல்லுாரிகளில் கிடைக்கும் படிப்பை படித்து ஆசைகளை புதைத்து வருகின்றனர். இந்தாண்டு கல்லுாரி அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தாலும், அதற்கான அறிகுறியே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.கடந்த, 2009ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தான், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. எனவே, தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் மனது வைத்து, நர்சிங் கல்லுாரி கொண்டு வர நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். நர்சிங் படிப்பு மட்டுமின்றி, துணை மருத்துவ படிப்புக்கான கல்லுாரி துவங்கி, ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின், கனவை நிறைவேற்ற, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.கட்டட வசதியும் இருக்கு!பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, நகராட்சி சார்பில் துணிக்கடைக்கு கட்டடம் வாடகைக்கு விடப்பட்டது. முறையாக வாடகை செலுத்தாததால் பூட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் தற்போது பயன்பாடின்றி உள்ளது.இந்த கட்டடத்தையும், காலி இடத்தையும் அரசு மருத்துவமனை வசம் ஒப்படைக்கலாம். அல்லது, நகராட்சி, மருத்துவமனை ஒப்பந்தம் செய்து, நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புக்கான கல்லுாரியை துவங்கலாம். வீணாக உள்ள கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், பொள்ளாச்சி மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us