சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பகுதி நேர பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக உயர்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டுக்கு, பகுதி நேர பி.இ., பட்டப் படிப்பு சேர்க்கை நடத்தப்படுகிறது. இதன்படி, தகுதியான டிப்ளமா இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர், வேலுார் ஆகிய இடங்களில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள். காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரி, கோவையில் உள்ள கோயம்புத்துார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி போன்றவற்றில், பகுதி நேர பி.இ., இடங்கள் ஒதுக்கப்படும்.விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணிபுரிந்தவராகவோ அல்லது பணிபுரிவோராகவோ இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.ptbe-tnea.com/ என்ற இணையதளத்தில், ஆக., 3 வரை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் அல்லது 0422- - 2590080 மற்றும் 94869 77757 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.