மாணவர்களுக்கு ரூ.2.13 கோடி ஊக்கத்தொகை | Kalvimalar - News

மாணவர்களுக்கு ரூ.2.13 கோடி ஊக்கத்தொகைஜூன் 26,2022,21:53 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அகில இந்திய அளவில், பல்கலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், 2019 - 2020ம் ஆண்டு பதக்கங்கள் வென்ற 144 பேருக்கு, உயரிய ஊக்கத்தொகை வழங்க, 2.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், இந்திய அளவில் பல்கலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வெல்லும் மாணவர்களுக்கு 3 லட்சம்; வெள்ளி வெல்வோருக்கு 2 லட்சம்; வெண்கலம் வெல்வோருக்கு 1.50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.கடந்த, 2019 - 20ம் ஆண்டுகளில், பல்வேறு போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த 53 மாணவர்கள் 22 பதக்கங்களையும்; 91 மாணவியர் 27 பதக்கங்களையும் வென்றனர். மொத்தம், 144 மாணவர்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க, 2.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us