சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில், &'சிட்டீஸ்&' திட்டத்தின் கீழ், கட்டட உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், &'டிஜிட்டல்&' கட்டமைப்புகள், மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறையில் கல்வி கற்பித்தல் உள்ளிட்ட திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன.
அதன்படி, முதற்கட்டமாக 28 பள்ளிகள், நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மேலும், சிட்டீஸ் திட்டத்திற்கு பிரான்ஸ் மேம்பாட்டு முகமை, 76.20 கோடி கடனுதவி செய்துள்ளது. மேலும், &'ஸ்மார்ட் சிட்டி&' திட்டத்தில், 19.05 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பூடான் நாட்டிற்கான ஐரோப்பிய யூனியன் துாதர் யூகோ அஸ்டுடோ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியை, சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அங்கு, சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பள்ளிகள் மற்றும் சென்னையின் வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் உதவி புரிய தயாராக இருப்பதாக, ஐரோப்பிய யூனியன் துாதர் யூகோ அஸ்டுடோ தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நெசப்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வக முறைகளை பார்வையிட்டனர்.