சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்புகளில் சேர, ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று துவங்க உள்ளது.
படிப்பில் சேர விரும்புவோர், www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்கள் வழியே, மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். கல்லுாரிகளில் நேரடியாக விண்ணப்பம் வினியோகிக்கப்படாது என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கல்லுாரிகளின் எண்ணிக்கை மற்றும் பாடப்பிரிவுகள் உள்ளிட்டவற்றின் விபரங்கள், இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக, தேர்வு செய்யும் ஒவ்வொரு கல்லுாரிக்கும், 50 ரூபாய் செலுத்த வேண்டும். ஜூலை 7 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.