ஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன். | Kalvimalar - News

ஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன். ஜனவரி 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

எந்த பரபரப்புமின்றி பிரமாதமான எதிர்கால வாய்ப்புகளைத் தந்து வரும் படிப்பாக ஹோம்சயின்ஸ் படிப்பைக் கூறலாம். பிளஸ் 2 நிலையிலும் அல்லது பட்டப்படிப்பு நிலையிலும் ஒருவர் இந்த படிப்பை கற்க முடியும்.

 

பி.எஸ்சி., படிப்பாக இது தரப்படுகிறது. புட் அண்ட் மேனேஜ்மென்ட், சைல்ட் டெவலப்மெண்ட், ஹோம் மேனேஜ்மென்ட், கிளாத்திங் அண்ட் டெக்ஸ்டைல்ஸ், எக்ஸ்டென்ஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் என 5 முக்கியப் பாடப் பிரிவுகள் இதில் இடம் பெறுகின்றன. இதைப் படிப்பவர்கள் பட்ட மேற்படிப்பில் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம். நல்ல வேலை வாய்ப்புகளை இது கொண்டிருப்பதால், சிறந்த கல்லூரி அல்லது கல்வி நிறுவனம் ஒன்றில் இதைப் படிப்பது நாம் எதிர்பார்க்கும் பலனைத் தரும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us