&'கட் ஆப்&' பற்றி புரிந்து கொண்டேன்!
உயர் கல்விக்கான ஆலோசனைகள் பெறுவதற்கு, &'தினமலர்&' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் எதிர்காலத்துக்கான ஆலோசனைகள் மட்டுமின்றி, தினமலர் நடத்திய போட்டியில், &'லேப்டாப்&' பரிசும் கிடைத்து, இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முயற்சித்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, இங்கே கிடைத்துள்ளது.-- ஆதித்யா காளிதாஸ், வில்லிவாக்கம்.வங்கி மேலாளர் ஆக வேண்டும் என்பது, என் அப்பாவின் ஆசை. &'
தினமலர்&' வழிகாட்டியில், எதை எப்படி படிக்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. பேச்சாளர்களின் தகவல்கள், என்னை போன்ற மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது.- -டி.காவியாஸ்ரீ, புரசைவாக்கம்.
நான் பிளஸ் 2 உயிரியல் பாடப்பிரிவு படித்துள்ளேன். அடுத்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இதற்கான படிப்பு மற்றும் கல்லுாரிகளை வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்து தெரிந்து கொண்டேன்.-- வ.தமிழ்தாரகை,- ராயப்பேட்டை.
பிளஸ் 2வுக்கு பின், என்ன படிக்க வேண்டும்; எப்படி கல்லுாரியை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருந்தது. அது, வழிகாட்டி நிகழ்ச்சி வழியாக தீர்ந்து விட்டது. என் தோழிகளுக்கும், இங்கு பெற்ற ஆலோசனைகளை கூற உள்ளேன்.-- சரண்யா,- திருவொற்றியூர்.
கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கால்நடை மருத்துவம் படிக்க, எவ்வளவு &'கட் ஆப்&' என்பது குறித்து வழிகாட்டி நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டேன்.-- கே.ஜெகன்,- மேடவாக்கம்.
என்ன படிக்கலாம்; புதிய பாடப்பிரிவுகள் என்ன; வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்வது எப்படி என்பதற்கு, இந்த நிகழ்ச்சியில் பல ஆலோசனைகள் பெற்றுள்ளேன். கல்வியாளர்கள் மற்றும் துறை நிபுணர்களின் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தன.-- ஆர்.சுமந்த்,- முகப்பேர்.
பாடத்திட்டத்தை மட்டும் படிக்காமல், துறை சார்ந்த புதிய விஷயங்கள் குறித்து, &'அப்டேட்&' ஆக வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். நிகழ் காலம் குறித்து மட்டுமின்றி, வருங்கால வளர்ச்சியையும் அறிந்து படிக்க வேண்டும் என, தெரிந்துக் கொண்டேன். வழிகாட்டி நிகழ்ச்சியில் நடத்திய போட்டியில், பரிசும் கிடைத்துள்ளது, இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.- -ஜி.தேஜஸ்வி அதிதி,- சைதாப்பேட்டை