&'பல்கலைக்கழகங்கள் கருத்துப் பரிமாற்றத்துக்கான களமாக இருக்க வேண்டுமே தவிர, கருத்தியல் மோதலுக்கான இடமாக இருக்கக்கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பேசிய அவர், ‘இளைஞர்கள் நாட்டிற்கான தங்கள் கடமைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா அமைதியை வணங்குகிறது, அமைதியை விரும்புகிறது மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது என்றும் சிலர் இந்தியாவை பிரச்சனைகளின் நாடு என்று அழைக்கிறார்கள், ஆனால், நம் நாட்டில் மில்லியன் கணக்கான பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 5+3+3+4 திட்டத்தின்படி, முதல் ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியை கற்பிப்பது மிகவும் முக்கியம் என்றும் அறிவுறித்தியுள்ளார்.