மனநிலை மாற வேண்டும்! | Kalvimalar - News

மனநிலை மாற வேண்டும்!மே 22,2022,22:26 IST

எழுத்தின் அளவு :

வாய்ப்புகள் குறையாத, என்றும் தேவை மிகுந்த ஒரு துறை, இன்ஜினியரிங். முறையான திறன் வளர்த்துக்கொண்டால் போதும், வாய்ப்புகள் கொட்டிகிடக்கும் துறை இது.

கொரானா காலக்கட்டத்தில் ஐ.டி., துறையின் மிகப்பெரிய வளர்ச்சியால் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி., மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், மிஷின் லேர்னிங், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், பிளாக் சயின், சைபர் செக்யூரிட்டி, ஐ.ஓ.டி., சைபர் பிசிக்ஸ் சிஸ்டம்ஸ் என விரிவடைந்து கொண்டே செல்லும் இத்தகைய புதிய தொழில்நுட்பங்களில் மனிதவளம் அதிகளவில் தேவைப்படுகிறது. 



பல்துறை அறிவு



அனைத்து துறைகளுக்குமான கம்ப்யூட்டர் சார்ந்த தேவையை பூர்த்தி செய்வதே ஐ.டி.,யின் பிரதான பணி என்பதால், பிற துறை சார்ந்த அறிவு கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. அதேபோல், பிற பொறியியல் துறை மாணவர்களும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை வளர்த்துக்கொண்டால் வாய்ப்புகள் பிரகாசமாகும். 



உதாரணமாக, பயோமெடிக்கல், மெக்கானிக்கல் துறை மாணவர்களும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் திறன்களை பெற வேண்டியது இன்று அவசியம். அதற்கு ஏற்ப, கல்லூரிகளில் பல்துறை சார்ந்த திறன் வளர்ப்பிற்கு தேவையான அம்சங்களை ஏற்படுத்துக்கொடுக்க வேண்டும். 



ஐ.டி., துறையைப் போன்று கணிசமான சம்பளம் பிற பொறியியல் துறைகளில் இளம் பட்டதாரிகளுக்கு இல்லை என்றபோதிலும், 3 ஆண்டு பணி அனுபவத்திற்கு பிறகு சிறந்த இடத்தை பெற முடியும். அதற்குரிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் மிக முக்கியம். 



இன்னும் சில ஆண்டுகளில் கம்ப்யூட்டர் துறைக்கு இணையாக, உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்து, அவை சார்ந்த பணி வாய்ப்புகள் இந்தியாவில் அதிகரிக்கும். நம் நாட்டில் நிறுவனங்கள் புதியதாக அதிகரிக்க, அதிகரிக்க அனைத்து துறைகளிலும் மனிதவளம் தேவைப்படும்.



கல்லூரி வாழ்க்கை...


 


பெரும்பாலான மாணவர்கள், &'ஜாலி’யாக இருக்கவேண்டும் என்ற மனநிலையிலேயே பள்ளி முடித்து கல்லூரிக்கு வருகின்றனர். ஆனால், மாணவர்கள் எண்ணுவது போல் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் மட்டுமல்ல கல்லூரி காலக்கட்டம். திறன்களை வளர்ப்பிற்கு அடித்தளமிடும் காலக்கட்டம் அவை. கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்காக, ஏ.ஐ.சி.டி.இ., சிறப்பு வகுப்புகளை நடத்துகிறது. அவற்றில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்போதுதான், கல்லூரி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கு ஏற்ப செயல்பட முடியும். 



பள்ளி மற்றும் கல்லூரி இரண்டிற்குமான வேறுபாட்டை மாணவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். மாணவர்களிடம் வேலை வாய்ப்புத் திறன்களை வளர்ப்பதில் மட்டுமின்றி, தொழில் முனைவார் திறன், வாழ்க்கைத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தவும் கல்லூரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். 



தன்னார்வலராக சமுதாய பணிகளில் ஈடுபட மாணவர்கள் முனைப்பு காட்ட கல்லூரிகள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தொழில்துறை சார்ந்த பயிற்சி, கல்வி சுற்றுலா என ஏதேனும் ஒரு விதத்திலாவது, இன்றைய மாணவர்களுக்கு சர்வதேச அனுபவமும் கட்டாயம் தேவை. 



-அகிலா, கே.பி.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, கோவை




Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us