புது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை: பாரதியார் பல்கலைக்கு முதலிடம் | Kalvimalar - News

புது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை: பாரதியார் பல்கலைக்கு முதலிடம்மே 17,2022,13:59 IST

எழுத்தின் அளவு :

கோவை: புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதில், பாரதியார் பல்கலை தொடர்ந்து மாநிலத்தில் முதல் இடத்தில் இருந்து வருகிறது என, பல்கலையின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குனர் பரிமேலழகன் தெரிவித்தார்.

காப்புரிமை மையங்களை, அனைத்து கல்வி நிறுவனங்களில் அமைக்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 2016ம் ஆண்டு பாரதியார் பல்கலையில் அறிவுசார் காப்புரிமை மையம் துவக்கப்பட்டது. 



பல்கலையின் டெக்ஸ்டைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மருத்துவ இயற்பியல், உயிரியல், பயோ- டெக்னாலஜி, இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காப்புரிமைக்கும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.



இதுவரை, 24 காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதில் எட்டுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள, 16 காப்புரிமைகள் பரிசீலனையில் உள்ளன. இதன் மூலம், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் காப்புரிமை பெற்று, பாரதியார் பல்கலை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 



பல்கலையின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குனர் பரிமேலழகன் கூறியதாவது: 



காப்புரிமை சார்ந்த விழிப்புணர்வு தற்போது பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, காப்புரிமைக்காக விண்ணப்பிப்பதும் அதிகரித்துள்ளது. பொதுவாக, காப்புரிமை பெறுவதற்கு அதிக கால அவகாசம் பிடிக்கிறது.



இது முறையான நடைமுறையே. காப்புரிமை பதிவு மற்றும் ஒப்புதலுக்கு, சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய நான்கு இடங்களில், காப்புரிமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. காப்புரிமைக்காக புதிய கண்டுபிடிப்பை பதிவு செய்யும், இந்த நான்கு அலுவலகங்களின் கீழ் உள்ள தேர்வாளருக்கு விண்ணப்பம் செல்லும். 



அந்த தேர்வாளருக்கு ஒதுக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில், கால அவகாசம் இருக்கும். தற்போது அனைத்து விண்ணப்பங்களுக்கும், விரைந்து ஒப்புதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலை தவிர்த்து, பிற பல்கலைகளை ஒப்பிடும் போது, அதிக காப்பீடுகள் பதிவு செய்துள்ள பல்கலைகளில், பாரதியார் பல்கலை முன்னணியில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us