ராமநாதபுரம்: உலக யோகா தினம் ஜூன் 21ல் கொண்டாடப்படுவதையொட்டி நேரு யுவகேந்திரா, ராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்பம், மாவட்ட வளரி சங்கம், சிலம்பொலி கிராமிய கலைக்குழு சார்பில் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் தொடக்கபள்ளியில் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது.
யோகா, வேல் கம்பு சுற்றுதல், குத்துவரிசை ஆசிரியர் குரூஸ்ஜெகன் பயிற்சி அளித்தார். நடிகர்இளங்கோ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் பிரவின்குமார், மாவட்ட மல்லர் கம்பம் தலைவர் அரு.சுப்பிரமணியன், பொருளாளர் சரவணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட மல்லர் கம்ப மாவட்ட செயலாளர் லோகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.