சென்னை: சென்னை மாநகராட்சியின், தசைத்திறன் குறைபாடு உள்ளோருக்கான சென்னை சிறப்பு பள்ளியில் நிறைவடைந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாடல் பள்ளி சாலையில், தசைத்திறன் குறைபாடு உள்ளோருக்கான சென்னை சிறப்பு பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம், கூடைப் பந்தாட்ட அரங்கம், சர்.பிட்டி.தியாகராயர் நினைவு கல்வெட்டு ஆகியவற்றை, முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு, லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார். அத்துடன், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான &'லிப்ட்&' வசதியுடன் கூடிய சிறப்பு பஸ் சேவையையும் முதல்வர் துவக்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.