தொழில்நுட்பம் மாற்றம் ஒன்றே மாறாதது | Kalvimalar - News

தொழில்நுட்பம் மாற்றம் ஒன்றே மாறாததுமே 15,2022,22:08 IST

எழுத்தின் அளவு :

தொழில்நுட்பம் இன்றி எதுவும் கைகூடுவதில்லை. ஆண்டுதோறும், மே 11 அன்று, தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது.இந்த தினத்தில் தொழில்நுட்பத் திறன் படைத்தோர், நாட்டின் முன்னேற்றத்துக்கு மாபெரும் படிக்கல்லாக இருந்ததை, தொழில்நுட்பவியலாளர்கள் நினைவுகூர்ந்தனர்.நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி திறன், டிஜிட்டல் வளர்ச்சி என பல்வேறு சிறப்புகளும், தொழில்நுட்பத் திறன் தொடர்புடையவைதான்.தொழில்நுட்பம் என்பது மக்களின் தேவைக்கேற்ப பல பரிணாமங்களை முன்னெடுக்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும், இதை அடிப்படையாக வைத்தே செயல்படுகிறார். தேவை ஏற்படும்போது அதற்கேற்ப தீர்வாக தொழில்நுட்பத் திறன் உருமாறுகிறது.தன்னிகரற்ற பின்னலாடை நகராக உருவெடுத்துள்ள திருப்பூர், தொழில்நுட்பங்களைச் சார்ந்துதான் வளர்ச்சியடைந்திருக்கிறது. பல்வேறு துறைகளைக் கொண்டதாக, பின்னலாடைத்துறை விளங்குகிறது. ஒவ்வொரு துறையுமே, புதுவிதத் தொழில்நுட்பங்களை அடிக்கடிச் செயல்படுத்தி, அதில் வெற்றி கண்டபின், அவற்றைச் செயல்படுத்துகின்றன.குறிப்பாக, நிட்டிங்கில் துவங்கி, ஒவ்வொரு துறைகளிலும், தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின்னலாடை, விசைத்தறி என ஒவ்வொரு தொழில்துறையும் சிறக்க பொதுப்பயன்பாட்டு மையங்களும் செயல்பாட்டுக்கு வருகின்றன.அனுபவ அறிவுடன் தொழில்நுட்ப அறிவிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்தான், பின்னலாடைத்துறையில் உயர்ந்தோங்குகின்றன.கடந்த இரு ஆண்டுகளாக தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்துவந்த &'நிட்டெக்&' கண்காட்சி, அடுத்த மாதம் நடைபெற உள்ளது.&'&'கடந்த இரு ஆண்டுகளில், தொழில்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மாற்றமடைந்து, அதிநவீனமாகியிருக்கின்றன. பஞ்சு, நுால் விலை அபரிமிதமா க உயர்ந்து வரும் நிலையில், துணி வீணாதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய தொழில்நுட்பங்களுடன் புதிய மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சந்தையில் கால் பதிக்கின்றன&' என்கிறார், கண்காட்சி தலைவர் ராயப்பன்.தொழில்நுட்பம் இன்றி, திருப்பூரின் உற்பத்தித்திறன், விரைவான வினியோகம் போன்றவை சாத்தியமில்லை என்பது கண்கூடு. தொழில்நுட்ப மாற்றங்கள், &'மாற்றம் ஒன்றே மாறாதது&' என்பதை உறுதிபட எடுத்துக்கூறுகின்றன.
மெய்நிகர் நுட்பம்சமீபகாலமாக மெய்நிகர் தொழில்நுட்பங்கள், திருப்பூரையும் விட்டுவைக்கவில்லை. கண்காட்சியாகட்டும்; தொழில்முனைவோர் - வர்த்தகர் சந்திப்பாகட்டும்; மெய்நிகர் தொழில்நுட்பங்கள் கைகொடுக்கின்றன.தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், இன்னும் கண்டறியப்பட வேண்டிய, தீர்வை நோக்கிய பிரச்னைகளையும் தொழில்துறை கொண்டிருக்கிறது. சாய ஆலை சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு உப்புகள் தேக்கமடைந்திருக்கின்றன. இப்பிரச்னைக்கு அறிவியல்ரீதியான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us