சென்னை: தமிழ் கலாசாரம், பண்பாடு, வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், சிறந்த நுால்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் ஜெ.மோகன் விடுத்த அறிக்கை:
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையமும், முத்துமணி துரைசாமி - துரைசாமி அறக்கட்டளையும் இணைந்து, ஆண்டு தோறும் சிறந்த நுாலுக்கான விருதுகளை வழங்கி வருகிறது. இவ்வாண்டும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு, 2019 ஏப்., 1 முதல் நடப்பாண்டு மார்ச் உட்பட்ட காலத்தில் முதற்பதிப்பு கண்ட சமய மற்றும் சமய இலக்கியம் சார்ந்த நுால்களின் மூன்று பிரதிகளை, ஜூன் 15ம் தேதிக்குள், &'கே.துரைசாமி, மூத்த வழக்கறிஞர், அறங்காவலர் - சேக்கிழார் ஆராய்ச்சி மையம், எண் 54, வெங்கட கிருஷ்ணாபுரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28&' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வாகும் நுால்களுக்கு, ஜூலை மாத இறுதி வாரத்தில் நடக்கும் சேக்கிழார் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தேர்வு பெறாத நுால்கள் திருப்பி அனுப்ப இயலாது. இவ்வாறு, சிவாலயம் ஜெ.மோகன் தெரிவித்து உள்ளார்.