சென்னை பல்கலை பட்டமளிப்பு கவர்னர், முதல்வர் பங்கேற்பு | Kalvimalar - News

சென்னை பல்கலை பட்டமளிப்பு கவர்னர், முதல்வர் பங்கேற்புமே 12,2022,16:28 IST

எழுத்தின் அளவு :

சென்னை: துணை வேந்தர்கள் நியமன அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து பறித்து, தமிழக அரசுக்கு அளிப்பதற்கான மசோதாக்கள் தாக்கலாகி உள்ள நிலையில், வரும் 16ம் தேதி நடக்கும் சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னரும், முதல்வரும் பங்கேற்க உள்ளனர்.


தமிழகத்தில் உயர் கல்வி துறை மற்றும் பல்கலை நிர்வாகங்களில், கவர்னர் அலுவலக தலையீடு இருக்க கூடாது என, தமிழக அரசு கூறி வருகிறது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான மசோதாக்களும், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், கவர்னர் ரவியும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கும், சென்னை பல்கலை, 164வது பட்டமளிப்பு விழா, வரும் 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி பட்டங்கள் வழங்கி, பட்டமளிப்பு உரை நிகழ்த்த உள்ளார். சிறப்பு விருந்தினராக, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.


பல்கலை இணை வேந்தரும் அமைச்சருமான பொன்முடி, துணை வேந்தர் கவுரி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன், பதிவாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us