செயல்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம்! | Kalvimalar - News

செயல்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம்!மே 09,2022,11:48 IST

எழுத்தின் அளவு :

மென்பொருள் துறையில் மிகவும் வலிமை மிக்க நாடாக இந்தியாவை விளங்கிவரும் நிலையில், அதற்கான வேலைவாய்ப்புகளில் முன்பு ஆங்கில மொழி புலமை, அனலிட்டிக்கல் திங்கிங் போன்ற குறிப்பிட்ட சில திறன்கள் மட்டுமே தொழில் நிறுவனங்களால் எதிர்பார்க்கப்பட்டன. மேலும், நேர்முகத்தேர்வில் வரையறுக்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டு அவற்றிற்கு திறம்பட பதில் அளிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.


சமீபகாலமாக, ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ், ஐ.ஒ.டி., மிஷின் லேர்னிங் என நவீன தொழில்நுட்பங்களின் படையெடுப்பின் காரணமாக, தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழத் துவங்கியுள்ளன. எந்த துறை சார்ந்திருந்தாலும், அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு &'கம்ப்யூட்டர் லேங்குவேஜ்’ தெரிந்திருக்க வேண்டியது இன்றைய சுழலில் அவசியமாகிறது. மேலும், புதிய தொழில்நுட்பங்களை கற்பவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. 


செயல்முறை பயிற்சி


எங்களது கல்வி நிறுவனத்தில், அனைத்து துறை மாணவர்களுக்கும் ஒரு செமஸ்டரில் 90 வேலை நிறைவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 60 நாட்கள் கல்லூரிகளில் வகுப்பறை கல்வியும், 30 நாட்கள் சேன்ட்விச் படிப்புகளைப் போன்று, துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் நேரடியாக செயல்முறை பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, வகுப்பறை கல்வி மட்டுமல்லாது செயல்முறை பயிற்சியும் வழங்குவதற்காக ஏராளமான தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ரூ.65 ஆயிரம் கோடி மானியம்!


28 லட்சம் கோடி ரூபாய் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் நிலையில், உள்நாட்டிலேயே அத்தகைய பொருட்களை உற்பத்தி செய்ய அரசு ஊக்குவிக்கிறது. இதற்காக, இந்திய அரசு 65 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. இச்சூழலில், சுய தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதுவரை, இன்ஜினியரிங் பட்டதாரிகளை மட்டுமே இந்திய உருவாக்கி வந்த நிலையில் இனிவரும் காலங்களில் தொழில் துறை வல்லுநர்களையும், நிபுணர்களையும் உருவாக்க உள்ளது.


மெட்ரோ ரயில் போன்ற இதர திட்டங்களும் செயல்படுத்தப்படுவதால், ஐ.டி., துறை மட்டுமின்றி இதர துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அத்துறைகளில் உண்மையான ஆர்வம் கொண்டு மாணவர்கள் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகிறது. 


வாழ்வு இனிதாக...


மேலும், ஒவ்வொரு மாணவரும் வரலாறு, அன்றாட நிகழ்வுகள், பொருளாதாரம், அரசியல், இலக்கியம் ஆகியவற்றையும் படிக்க வேண்டும். குறிப்பாக அனைத்தும் புரிந்து படிக்க வேண்டும். பல துறைகளையும் படிக்கும் போது தான் வாழ்க்கை இனிமையானதாக அமையும்!


-டாக்டர் எஸ். தங்கவேலு, தலைவர், ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, கோவை.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us