சி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்? | Kalvimalar - News

சி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்? டிசம்பர் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., போல சி.எப்.ஏ.,வும் ஒரு சிறப்புப் படிப்பு தான். புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்தபின் இந்திய நிதித் துறை வேகமாக வளர்ந்து வருவதை அறிவோம்.

இந்த வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள நிதித் துறைக்கு சிறப்பு நிபுணர்கள் பலர் தேவை. அதைத் தருவதில் சி.எப்.ஏ., வுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. வர்த்தகத் துறை நிதி, பன்னாட்டு நிதி, முதலீட்டு மேலாண்மை, நிதிச் சேவைகள் என நமது நிதித் துறையில் சி.எப்.ஏ.,வுக்கான தேவைகள் இருக்கும் பிரிவுகள் பல உள்ளன. பொருளாதாரம், குவான்டிடேடிவ் அனலிசிஸ், பொருளாதாரச் சட்டங்கள், பாதுகாப்பு மறுஆய்வு போன்ற திறன்களை அடிப்படையாகக் கொண்ட பணிகளை சி.எப்.ஏ.,க்கள் செய்கிறார்கள்.

மேலும் புராஜக்ட் பிளானிங், மெர்ச்சன்ட் பாங்கிங் சேவை, போர்ட்போலியோ மேனேஜ்மென்ட், கிரெடிட் ரேட்டிங் என இவர்களது பணித் தன்மை பரந்துபட்டதாக விளங்குகிறது.

பொதுவாக சி.எப்.ஏ., துறை
பின்வரும் 5 பிரிவுகளில் இயங்குகிறது எனக் கூறலாம்.
* நிதிச் சந்தைகள் (ஈக்விடி, டெப்ட் மற்றும் டிரைவேடிவ்)
* ஆய்வு மற்றும் மறு மதிப்பீடு
* போர்ட்போலியோ மேனேஜ்மென்ட்
* மியூச்சுவல் பண்ட் மற்றும் பிற பண்டுகள்
* நெறிமுறைகள் (கோட் ஆப் கான்டக்ட்)

அடிப்படையில் நிதி சார்ந்த படிப்புகளில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் மட்டுமே இதில் சேரலாம். பி.காம்., படிப்பை நமது கலை அறிவியல் கல்லூரிகளில் ஏனோதானோவென்று படிப்பது போல படித்தால் இந்தப் படிப்பு உதவாது என்பதை அறிந்து முடிவெடுக்கவும். இதற்கான கல்விக் கட்டணமும் அதிகம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us