பிளஸ் 2 படித்து வருகிறேன். 2 ஆண்டுகளில் எங்கு பட்டப்படிப்பைப் பெறலாம்? சீக்கிரமாக வேலையில் சேர விரும்புகிறேன். | Kalvimalar - News

பிளஸ் 2 படித்து வருகிறேன். 2 ஆண்டுகளில் எங்கு பட்டப்படிப்பைப் பெறலாம்? சீக்கிரமாக வேலையில் சேர விரும்புகிறேன்.டிசம்பர் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

முதலில் 2 ஆண்டுகளில் படித்து முடிக்கக் கூடிய பட்டப்படிப்பு என்பது எதுவுமில்லை என்பதை அறியுங்கள். உங்களைப் போல பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் எவ்வளவு தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் கவனித்து நீங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி யோசியுங்கள்.

சீக்கிரமாக வேலையில் சேர விரும்புவதில் தவறில்லை. ஆனால் 3 ஆண்டுப் படிப்பை அதற்காக 2 ஆண்டுகளில் படிக்க முடியுமா? இந்தியாவெங்கும் பட்டப்படிப்பு என்பது 3 ஆண்டு படிப்பு தான். ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு என்பது 5 ஆண்டுகள் படிப்பு. பட்டப்படிப்பு + பட்ட மேற்படிப்பு இரண்டையும் சேர்த்து 3 + 2 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

பிளஸ் 2 முடிக்கவிருக்கும் நீங்கள் அதன் பின் இவற்றில் ஒன்றில் சேரலாம். படிக்கும் போதே உங்களது பொது அறிவு, தகவல் தொடர்புத் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் நல்ல வேலை ஒன்றை நீங்கள் பெறுவதில் சிரமம் இருக்காது என நம்பி முயற்சியை துவங்குங்கள்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us