இன்ஜி., தேர்வுக்கு பதிவு | Kalvimalar - News

இன்ஜி., தேர்வுக்கு பதிவுஜனவரி 29,2022,11:56 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'இன்ஜினியரிங் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்&' என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.


கல்லுாரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், &'ஆன்லைனில்&' நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள், பிப்., 1 முதல் துவங்குகின்றன. கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு பிப்., 20 வரையிலும், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மார்ச் 5 வரையிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணவர்களும், பதிவு செய்யலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலையின், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில், இன்று மாலை, 7:00 மணிக்குள் பதிவு செய்யலாம் என, பல்கலையின் தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் அறிவித்துள்ளது. 


சந்தேகங்களுக்கு, 044 - 2235 7272 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us