சென்னை: பிப். 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நேரடியாக நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
* பிப்.1 முதல் ஒன்றாம் வகுப்பு 12ம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும்.
* கொரோனா கட்டுப்பாட்டு மையமாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, பிற அரசு தனியார் பல்கலைகழகங்கள், கல்லூரிகள், தொழிற் பயிற்சி மையங்கள் ஒன்றாம் தேதி முதல் செயல்பட அனுமதி .
*உள்அரங்கில் நடத்தப்படும் கருத்தரங்கள், இசையரங்கள் உள்ளிட்டவை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம்.
*அரசு தனியார் கலை நிகழ்ச்சிகள் பொருட்காட்சி நடத்த தடை நீட்டிப்பு
* உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவித பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தலாம்.
* மழலையர் விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிப்பு.