சென்னை: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பிப்., 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கும்படி, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதன் விவரம்:
&'அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது அவசரத் தேவை&' என, கவர்னர் தெரிவித்துஉள்ளார். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்த, முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை நாடு அறியும். அதை இன்னும் வேகப்படுத்த ஓடிக் கொண்டிருக்கிறோம்.
அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமாக இல்லாமல், பெருமையின் அடையாளமாக இருக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். ஒரே நாளில் மாற்ற இயலாது. படிப்படியாக மாற்றப்படும். அரசு பள்ளிகளை மேம்படுத்துவோம். நீட் தேர்வு மசோதாவை, கவர்னர் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தி வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இரு மொழிக் கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டோம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பிப்ரவரி 1 முதல் நேரடி வகுப்புகள் துவக்க அனுமதிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டு உள்ளோம். இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.