தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு | Kalvimalar - News

தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்புஜனவரி 27,2022,11:54 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெறுவோரின் பெயரை, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.


பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு கம்பர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்; மகாகவி பாரதியார் விருது - பாரதிகிருஷ்ணகுமார்; பாவேந்தர் பாரதி தாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்; சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியருக்கு வழங்கப்படுகிறது.


சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம்; அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - சஞ்சீவிராயர்; தேவநேயப்பாவாணர் விருது - அரசேந்திரன்; உமறுப்புலவர் விருது - மம்மது; கி.ஆ.பெ., விருது - ராஜேந்திரன்; கம்பர் விருது - பாரதி பாஸ்கருக்கு வழங்கப்படுகிறது.ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வன்; மறைமலையடிகள் விருது - சுகிசிவம்; அயோத்தி தாசப் பண்டிதர் விருது - அலாய்சியஸ் ஆகியோருக்கு வழங்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.


அதேபோல, தமிழ்த்தாய் விருது - மலேஷிய தமிழ் எழுத்தாளர் சங்கம்; சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு முதல், விருது பெறுவோருக்கான பரிசுத் தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அத்துடன், 1 சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us