தனியார் பள்ளிகள் சார்பில் இல்லத்தில் கல்வி திட்டம் | Kalvimalar - News

தனியார் பள்ளிகள் சார்பில் இல்லத்தில் கல்வி திட்டம்ஜனவரி 28,2022,01:35 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு பள்ளிகளை போல், தனியார் பள்ளிகளும் இல்லத்தில் கல்வி என்ற திட்டத்தில், மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து பாடம் நடத்த தயாராகி வருகின்றன. இதற்கான சோதனை முயற்சிகளும் பல பள்ளிகளில் துவங்கியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப் பட்டன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 


பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரையிலும், கல்லுாரிகளுக்கு பிப்., 20ம் தேதி வரையிலும், நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லுாரி மாணவர்களுக்கு &'ஆன்லைன்&' வழி தேர்வும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், தமிழக அரசின் சார்பில் &'இல்லம் தேடி கல்வி&' என்ற திட்டத்தில் நேரடியாக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதில், தன்னார்வலர்களை நியமித்து, அவர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்கள் நடத்துவதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ள இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள சமூக நலக் கூடங்கள், அங்கன்வாடிகள், பொது மண்டபங்கள், தனியார் கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, அரசு பள்ளி மாணவர்களை வரவழைத்து, நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், ஊரடங்கால் நேரடி வகுப்பு நடத்த முடியாமல் தவிக்கும், தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கைகளின் படி, இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு போட்டியாக, இல்லத்தில் கல்வி என்ற திட்டத்தை வகுத்துள்ளனர். இதில், மாணவர்களை ஆசிரியர்களின் வீடுகளுக்கு வரவைத்து, அங்கு ஒவ்வொரு வகுப்புக்கும், நேரடி வகுப்பு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அரசு பள்ளி மாணவர்களை போல், தனியார் பள்ளி மாணவர்களிலும் பலர் மொபைல் போன் மற்றும் இணையதள வசதி இல்லாமல் இருப்பதால், அவர்கள் கற்றலில் பின்தங்குவதை தடுக்க, இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளனர். அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, இந்த வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கான சோதனை முயற்சியாக, பல பள்ளிகள் சார்பில், தற்போதே வீடுகளில் வகுப்புகள் துவங்கியுள்ளன. விரைவில் அனைத்து பள்ளிகளும், இந்த திட்டத்தை செயல்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us