அரசு பள்ளி மாணவர்களுக்கு கடைசி நேரத்திலும் வாய்ப்பு | Kalvimalar - News

அரசு பள்ளி மாணவர்களுக்கு கடைசி நேரத்திலும் வாய்ப்புஜனவரி 26,2022,10:35 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு பள்ளி மாணவர்கள், விண்ணப்பத்தில் சமர்ப்பிக்காத ஆவணங்களை, 28ம் தேதி காலை 8:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம், என, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் வசந்தாமணி கூறினார்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், வெளியிடப்பட்டது. இதில், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 25 ஆயிரத்து 593 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின், 24 ஆயிரத்து 949 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.


குற்றச்சாட்டு


இவர்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான பட்டியலில் 1,806 பேர் இடம் பெற்றனர். இவர்களுக்கு 436 எம்.பி.பி.எஸ்., - 97 பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உள்ஒதுக்கீடு பட்டியலில், அரசு பள்ளிகளில் படித்து, விண்ணப்பித்த பல மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.விடுபட்ட மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நீட் திட்ட ஒருங்கிணைப்பாளர் வழியே, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு தகவல் அளித்தனர்.


இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தரவரிசையில் விடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் வசந்தாமணி கூறியதாவது:


அரசு பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், பள்ளிகளில் பெற்ற, &'போனாபைடு&' என்ற உறுதி அளிப்பு சான்றிதழை ஆவணங்களுடன் இணைக்கவில்லை. இதனால், உள் ஒதுக்கீட்டுக்கு பதிலாக, அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டிருப்பர்.


ஆவணங்கள் பரிசீலனை


உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் மாணவர்கள், வரும் 28ம் தேதி காலை 8:00 மணிக்குள், அதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு துவங்கும் முன், ஆவணங்களை அளிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின், அவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டு, 28, 29ம் தேதி நடைபெறும் கவுன்சிலிங்கில் இடம் பெறுவர். அதன்பின் வரும் ஆவணங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us