128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு | Kalvimalar - News

128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்புஜனவரி 26,2022,10:32 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், மறைந்த கல்யாண் சிங்குக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பத்ம பூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


நடிகை சவுகார் ஜானகி, எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த இசைக்கலைஞர் முருகையனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.


கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.அதன்படி இந்தாண்டு நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடைபெறும் விழாக்களில், ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்குவார். இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டோரில், இரண்டுஜோடிகள் அடங்குவர்.


மொத்தம் 34 பேர் பெண்கள். மேலும் வெளிநாட்டினர், வெளிநாட்டு வாழ் இந்தியர், இந்திய வம்சாவளியினர், 10 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. இதைத் தவிர, 13 பேருக்கு இறப்புக்குப் பிறகு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு, உயரிய பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச முதல்வராக இருந்த மறைந்த பா.ஜ., மூத்த தலைவர் கல்யாண் சிங்குக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


காங்., மூத்த தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.


கொரோனாவுக்கு எதிராக &'கோவாக்சின்&' தடுப்பூசி கண்டுபிடித்துள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த &'பாரத் பயோடெக்&' நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா மற்றும் அவரது மனைவி சுசித்ரா எல்லாவுக்கு கூட்டாக பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.


அதேபோல், &'கோவிஷீல்டு&' தடுப்பூசி தயாரிக்கும், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த &'சீரம்&' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைரஸ் பூனேவாலாவும் இந்த விருது பெற உள்ளார்.


அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய சத்ய நாராயண நாதெள்ளா; கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரும் பத்மவிபூஷண் விருது பெற உள்ளார்.


பிரபல நடிகை சவுகார் ஜானகி, எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர்:


பத்ம விபூஷண்


1. பிரபா ஆத்ரே- (கலை)-மஹாராஷ்டிரா

2. ராதேஷ்யாம் கெம்கா (மறைவுக்குப் பின்)- இலக்கியம், கல்வி -உத்தர பிரதேசம்

3. ஜெனரல் பிபின் ராவத் (மறைவுக்குப் பின்)- பொது சேவை -உத்தரகண்ட்

4. கல்யாண் சிங் (மறைவுக்குப் பின்) -பொது விவகாரம் -உத்தர பிரதேசம்


பத்ம பூஷண்


5. குலாம் நபி ஆசாத் -பொது விவகாரம்- ஜம்மு - காஷ்மீர்

6. விக்டர் பானர்ஜி -கலை -மேற்கு வங்கம்

7. குர்மிர் பாவா (மறைவுக்குப் பின்)- கலை -பஞ்சாப்

8. புத்ததேவ் பட்டாச்சார்யா- பொது விவகாரம் -மேற்கு வங்கம்

9. நடராஜன் சந்திரசேகரன் -தொழில், வர்த்தகம்- மஹாராஷ்டிரா

10. கிருஷ்ண எல்லா மற்றும் சுசித்ரா எல்லா -தொழில், வர்த்தகம்- தெலுங்கானா

11. மதுர் ஜாப்ரி -சமையல் கலை- அமெரிக்கா

12. தேவேந்திர ஜஜாரியா -விளையாட்டு -ராஜஸ்தான்

13. ரஷீத் கான் -கலை -உத்தர பிரதேசம்

14. ராஜிவ் மெஹரிஷி- பொது சேவை- ராஜஸ்தான்

15. சத்ய நாராயண நாதெள்ளா -தொழில், வர்த்தகம் -அமெரிக்கா

16. சுந்தரராஜன் பிச்சை -தொழில், வர்த்தகம் -அமெரிக்கா

17. சைரஸ் பூனேவாலா -தொழில், வர்த்தகம்- மஹாராஷ்டிரா

18. சஞ்சயா ராஜாராம் (மறைவுக்குப் பின்) -அறிவியல், பொறியியல்- மெக்சிகோ

19. பிரதிபா ரே -இலக்கியம், கல்வி- ஒடிசா

20. சுவாமி சச்சிதானந்த்- இலக்கியம், கல்வி- குஜராத்

21. வஷிஷ்ட் திரிபாதி -இலக்கியம், கல்வி -உத்தர பிரதேசம்பத்மஸ்ரீ


22. பிரஹலாத் ராய் அகர்வாலா -தொழில், வர்த்தகம்- மேற்கு வங்கம்

23. பேராசிரியர் நஜ்மா அக்தர் -இலக்கியம், கல்வி -டில்லி

24. சுமித் அன்டில் -விளையாட்டு -ஹரியானா

25. டி. செங்கா ஆவ் -இலக்கியம், கல்வி -நாகாலாந்து

26. கமாலினி அஸ்தானா, நளினி அஸ்தானா- கலை- உத்தர பிரதேசம்

27. சுப்பண்ணா அய்யப்பன் -அறிவியல், பொறியியல்- கர்நாடகா

28. ஜே.கே. பஜாஜ் -இலக்கியம்,கல்வி- டில்லி

29. சிற்பி பாலசுப்ரமணியம் -இலக்கியம், கல்வி -தமிழகம்

30. ஸ்ரீமத் பாபா பலியா- சமூக சேவை -ஒடிசா

31. சங்கமித்ரா பந்தோபாத்யாய் -அறிவியல், பொறியியல்- மேற்கு வங்கம்

32. மாதுரி பர்த்வால் -கலை- உத்தரகண்ட்

33. அகோனே அஸ்கார் அலி பசாரட் -இலக்கியம், கல்வி -லடாக்

34. டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் -மருத்துவம் -மஹாராஷ்டிரா

35. ஹர்மொகிந்தர் சிங் பேடி -இலக்கியம், கல்வி- பஞ்சாப்

36. பிரமோத் பகத் -விளையாட்டு -ஒடிசா

37. எஸ். பல்லேஷ் பஞாந்திரி -கலை -தமிழகம்

38. கண்டு வாங்சுக் புடியா -கலை- சிக்கிம்

39. மரிய கிரிஸ்டோபர் பைர்ஸ்கி- இலக்கியம், கல்வி- போலந்து

40. ஆச்சாரிய சந்தனாஜி -சமூக சேவை -பீஹார்

41. சுலோசனா சவான் -கலை -மஹாராஷ்டிரா

42. நீரஜ் சோப்ரா -விளையாட்டு- ஹரியானா

43. சகுந்தலா சவுத்ரி -சமூக சேவை -அசாம்

44. சங்கரநாராயண மேனன் சுண்டயில்- விளையாட்டு -கேரளா

45. எஸ்.தாமோதரன் -சமூக சேவை- தமிழகம்

46. பைசல் அலி டர் -விளையாட்டு -ஜம்மு - காஷ்மீர்

47. ஜக்ஜித் சிங் டர்டி -விளையாட்டு, தொழில்- சண்டிகர்

48. புரோகார் தாஸ்குப்தா- மருத்துவம்- பிரிட்டன்

49. ஆதித்ய பிரசாத் டாஷ் -அறிவியல், பொறியியல் -ஒடிசா

50. டாக்டர் லதா தேசாய் -மருத்தவம்- குஜராத்

51 மால்ஜி பாய் தேசாய் -பொது விவகாரம் -குஜராத்

52 பசந்தி தேவி -சமூக சேவை -உத்தரகண்ட்

53 லுாரம்பம் பினோ தேவி- கலை- மணிப்பூர்

54 முக்தாமணி தேவி -வர்த்தகம் மற்றும் தொழில்- மணிப்பூர்

55 ஷியாமாமணி தேவி- கலை- ஒடிசா

56 கலில் தான்டேஜ்வி (மறைவுக்குப் பின்) -இலக்கியம் மற்றும் கல்வி- குஜராத்

57 சவாஜி பாய் தோலாக்கியா- சமூக சேவை- குஜராத்

58 அர்ஜூன் சிங் துர்வே -கலை -மத்திய பிரதேசம்

59 விஜய்குமார் விநாயக் டோங்கிரே- மருத்துவம்- மஹாராஷ்டிரா

60 சந்திரபிரகாஷ் திவிவேதி- கலை -ராஜஸ்தான்

61 தனேஷ்வர் எங்டி -இலக்கியம் மற்றும் கல்வி- அசாம்

62 ஓம் பிரகாஷ் காந்தி -சமூக சேவை -ஹரியானா

63 நரசிம்ம ராவ் கரிகாபதி -இலக்கியம் மற்றும் கல்வி -ஆந்திர பிரதேசம்

64 கிரிதாரி ராம் கோஞ்சு (மறைவுக்குப் பின்) -இலக்கியம் மற்றும் கல்வி- ஜார்க்கண்ட்

65 ஷைபால் குப்தா (மறைவுக்குப் பின்) -இலக்கியம் மற்றும் கல்வி -பீஹார்

66 நரசிங்க பிரசாத் குரு -இலக்கியம் மற்றும் கல்வி -ஒடிசா

67 கோசவீடு ஷேக் ஹாசன் (மறைவுக்குப் பின்) -கலை -ஆந்திர பிரதேசம்

68 ரியூகோ ஹிரா -வர்த்தகம் மற்றும் தொழில் -ஜப்பான்

69 சோசம்மா ஐபே -கால்நடை பராமரிப்பு- கேரளா

70 அவாத் கிஷோர் ஜாடியா -இலக்கியம் மற்றும் கல்வி- மத்திய பிரதேசம்

71 சவுகார் ஜானகி- கலை -தமிழகம்

72 தாரா ஜவஹர் -இலக்கியம் மற்றும் கல்வி -புதுடில்லி

73 வந்தனா கடாரியா -விளையாட்டு -உத்தரகண்ட்

74 கேஷவமூர்த்தி -கலை- கர்நாடகா

75 ருத்கர் கோர்டன்ஹார்ஸ்ட் -இலக்கியம் மற்றும் கல்வி -அயர்லாந்து

76 நாராயண குருப் - இலக்கியம் மற்றும் கல்வி -கேரளா

77 அவனி லேகாரா -விளையாட்டு- ராஜஸ்தான்

78 மோதிலால் மதன் -அறிவியல் மற்றும் பொறியியல்- ஹரியானா

79 ஷிவ்நாத் மிஸ்ரா -கலை -உத்தர பிரதேசம்

80 நரேந்திர பிரசாத் மிஸ்ரா ( மறைவுக்குப் பின்) -மருத்துவம்- மத்திய பிரதேசம்

81 தர்ஷனம் மொகிலையா - கலை -தெலுங்கானா

82 குருபிரசாத் மோஹபாத்ரா (மறைவுக்குப் பின்) -சிவில் சர்விஸ் -புதுடில்லி

83 தவில் கொங்கம்பட்டு முருகையன் -கலை -புதுச்சேரி

84 முத்துகண்ணம்மாள் -கலை -தமிழகம்

85 அப்துல் காதர் நடக்கட்டின் -கண்டுபிடிப்பு- கர்நாடகா

86 அமை மஹாலிங்க நாயக் -வேளாண்- கர்நாடகா

87 செரிங் நம்க்யால் -கலை -லடாக்

88 நடராஜன் -கலை -தமிழகம்

89 ககா -இலக்கியம் மற்றும் கல்வி -மிசோரம்

90 சோனு நிகாம்- கலை -மஹாராஷ்டிரா

91 ராம் சஹாய் பாண்டே -கலை -மத்திய பிரதேசம்

92 சிராபத் பிரபந்தவித்யா -இலக்கியம் மற்றும் கல்வி- தாய்லாந்து

93 ரபியா -சமூக சேவை -கேரளா

94 அனில் குமார் ராஜ்வன்ஷி - அறிவியல் மற்றும் பொறியியல் -மஹாராஷ்டிரா

95 ஷீஷ் ராம் -கலை -உத்தர பிரதேசம்

96 ராமசந்திரையா -கலை -தெலுங்கானா

97 சங்கர வெங்கட ஆதிநாராயண ராவ் - மருத்துவம்- ஆந்திர பிரதேசம்

98 காமித் ரமிலாபென் ரேசிங்பாய் - சமூக சேவை -குஜராத்

99 பத்மஜா ரெட்டி- கலை- தெலுங்கானா

100 குரு துல்கு ரின்போச்சே -ஆன்மீகம் - அருணாச்சல பிரதேசம்

101 பிரம்மானந்த் சங்க்வால்கர் -விளையாட்டு- கோவா

102 வித்யானந்த் சரேக் -இலக்கியம் மற்றும் கல்வி -ஹிமாச்சல பிரதேசம்

103 காளி பதா சரண் - இலக்கியம் மற்றும் கல்வி - மேற்கு வங்கம்

104 வீராசுவாமி சேஷையா- மருத்துவம்- தமிழகம்

105 பிரபாபென் ஷா -சமூக சேவை- தாதா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமான் மற்றும் தியூ

106 திலிப் ஷஹானி -இலக்கியம் மற்றும் கல்வி- புதுடில்லி

107 ராம் தயால் சர்மா -கலை -ராஜஸ்தான்

108 விஷ்வமூர்த்தி சாஸ்திரி- இலக்கியம் மற்றும் கல்வி -ஜம்மு - காஷ்மீர்

109 தாதியானா வோவ்னா ஷவும்யான் -இலக்கியம் மற்றும் கல்வி- ரஷ்யா

110 சித்தலிங்கையா (மறைவுக்குப் பின்)- இலக்கியம் மற்றும் கல்வி-கர்நாடகா

111 காஜி சிங் - கலை -மேற்கு வங்கம்

112 கொன்சம் இபோம்சா சிங் -கலை -மணிப்பூர்

113 பிரேம் சிங் -சமூக சேவை- பஞ்சாப்

114 சேத் பால் சிங் -வேளாண் -உத்தர பிரதேசம்

115 வித்யா விந்து சிங் -இலக்கியம் மற்றும் கல்வி -உத்தர பிரதேசம்

116 பாபா இக்பால் சிங் ஜி -சமூக சேவை- பஞ்சாப்

117 பீம்சேன் சிங்கால் -மருத்துவம் -மஹாராஷ்டிரா

118 சிவானந்தா -யோகா -உத்தர பிரதேசம்

119 அஜய் குமார் சோன்கர் -அறிவியல் மற்றும் பொறியியல் -உத்தர பிரதேசம்

120 அஜிதா ஸ்ரீவஸ்தவா -கலை- உத்தர பிரதேசம்

121 சத்குரு பிரம்மேஷானந்த் ஆச்சார்ய சுவாமி -ஆன்மீகம் -கோவா

122 பாலாஜி தாம்பே (மறைவுக்குப் பின்) -மருத்துவம் -மஹாராஷ்டிரா

123 ரகுவேந்திர தன்வர்- இலக்கியம் மற்றும் கல்வி- ஹரியானா

124 கம்லாகர் திரிபாதி -மருத்துவம் -உத்தர பிரதேசம்

125 லலிதா வாகில்- கலை- ஹிமாச்சல பிரதேசம்

126 துர்கா பாய் வியாம் -கலை -மத்திய பிரதேசம்

127 ஜெயந்த்குமார் மகன்லால் வியாஸ் -அறிவியல் மற்றும் பொறியியல் -குஜராத்

128 பதாப்லின் வர் -இலக்கியம் மற்றும் கல்வி- மேகாலயா


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us