தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் அலட்சியம்: 80 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு | Kalvimalar - News

தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் அலட்சியம்: 80 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புஜனவரி 23,2022,20:47 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி 2018 பேட்ச் மாணவர்களுக்கு இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடாததால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பல்கலை தொலைநிலைக் கல்வியில் 2018ல் (18 சிடி பேட்ச்) அனைத்து யு.ஜி., மற்றும் பி.ஜி., படிப்புகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கையாகி, இறுதியாண்டு தேர்வை நவ., 2020க்கு பதில் கொரோனாவால் ஆக.,2021ல் ஆன்லைனில் எழுதினர். 


இதற்கான முடிவு அக்டோபரில் வெளியிட்டிருக்க வேண்டும். இதுபோல் ஆன்லைனில் தேர்வு நடத்திய பிற பல்கலைகள் தேர்வு முடிவை உரிய நேரத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இப்பல்கலை மட்டும் இதுவரை வெளியிடவில்லை.


இதுகுறித்து உயர்கல்வி செயலாளர், தமிழக முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட பலருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார்கள் அனுப்பியுள்ளனர். 


அவர்கள் கூறியதாவது:


மூன்றாண்டு படிக்க வேண்டிய இளங்கலை படிப்புக்கு ஐந்தாண்டுகளாகியும் இன்னும் முடிவு தெரிந்த பாடில்லை. உரிய நேரத்தில் தேர்வு முடிவு வெளியிட்டிருந்தால் பிப்.,யில் டி.என்.பி.எஸ்.சி., நடத்தவுள்ள தேர்வில் நாங்கள் பங்கேற்றிருக்க முடியும். அந்த வாய்ப்பையும் இழந்துள்ளோம்.


இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., யிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். பி.ஜி., மாணவர்களும் பாதித்துள்ளனர். இதற்கு முழு பொறுப்பு அப்போதைய இயக்குனரான ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள், கண்காணிக்க தவறிய துணைவேந்தர் கிருஷ்ணன் தான். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us