சென்னை: தமிழக பள்ளி கல்வி துறையில் இடமாறுதல் கேட்டு, 59 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டில், 'ஆன்லைன்' வழியில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், 12ம் தேதி வரை பெறப்பட்டன. தொடக்க கல்வியில் மொத்தம், 25 ஆயிரத்து 402 ஆசிரியர்கள் இடமாறுதல் கேட்டுள்ளனர். அதிகபட்சமாக, 14 ஆயிரத்து 717 இடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் கேட்டுள்ளனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், 33 ஆயிரத்து 778 பேர் இடமாறுதல் கேட்டுள்ளனர். ஆட்சேபனைகள் பெறப்பட்டு, இறுதி பட்டியல் நாளை வெளியாகும். அதன்பின், 24ம் தேதி முதல் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.