வரும் 27ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் | Kalvimalar - News

வரும் 27ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங்ஜனவரி 20,2022,12:07 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், வரும் 27ம் தேதி துவங்கும், என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், எம்.டி. - எம்.எஸ்., பட்ட மேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.


பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: 


பட்ட மேற்படிப்பில் 2,216 இடங்கள் உள்ளன. இதில், 1,053 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, 1,163 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால், இன்று முதல் கவுன்சிலிங் துவங்குகிறது.


ஏற்கனவே நடந்த துணை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், மொத்தமுள்ள 16 ஆயிரத்து 693 இடங்களில், 16 ஆயிரத்து 486 இடங்கள் நிரம்பின; 207 இடங்கள் காலியாக உள்ளன.அரசு மருத்துவ கல்லுாரிகளில் 4,349; சுயநிதி கல்லுாரிகளில் 2,650 என, 6,999 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 436 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


அதேபோல, பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் 1,930 இடங்கள் உள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 98 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மொத்தம் 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 24ம் தேதி வெளியிடப்படும். அதன்பின், 27ம் தேதி மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.


தொடர்ந்து, 28, 29ம் தேதிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.இந்த மூன்று நாட்களில், குறைந்த அளவில் மாணவர்கள் பங்கேற்பதால் நேரடியாக கவுன்சிலிங் நடைபெறும். பின், 30ம் தேதி முதல் அனைத்து பிரிவினருக்கான பொது கவுன்சிலிங்கில் அதிகம் பேர் பங்கேற்பர் என்பதால், ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.


இதற்கான விரிவான தகவல் குறிப்பேடு, www.tnmedicalselection.org , www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us