பகுதிநேர பி.இ., படிப்பு | Kalvimalar - News

பகுதிநேர பி.இ., படிப்புஜனவரி 20,2022,12:46 IST

எழுத்தின் அளவு :

பணிபுரியும் இளைஞர்களும் இன்ஜினியரிங் படிக்க உதவும் வகையில், பகுதிநேர பி.இ., படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது.

வளாகங்கள்: 

இந்த சுயநிதி படிப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கிண்டி மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய இரண்டு வளாகங்களில் வழங்கப்படுகிறது.


துறைகள்:

காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கிண்டியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய மூன்று படிப்புகளும், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் வழங்கப்படுகிறது.


படிப்பு காலம்: 7 செமஸ்டர்களுடன் மூன்றரை ஆண்டுகள்.


வகுப்பு நேரம்: வார வேலை நாட்களில் மாலை 6.15 முதல் 9.15 மணிவரை வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும்.


தகுதிகள்: ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் பெறப்பட்ட மூன்று ஆண்டு டிப்ளமா படிப்பு. மேலும், துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமா முடித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிற்குள் தமிழகத்தில் பணிபுரிபவராக இருத்தல் வேண்டும். போதிய உடல் தகுதி பெற்றிருப்பதும் அவசியம்.


வயது வரம்பு: பி.இ., பகுதிநேர படிப்பில் சேர உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுள்ளவர்கள், https://admissions.annauniv.edu/ptbeapp2021/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வி சான்றிதழ்களுடன், தற்போது பணிபுரிவதற்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். 


சேர்க்கை முறை: 

விண்ணப்பிக்கும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலான கலந்தாய்வில் தகுதியான இடங்கள் ஒதுக்கப்படும். 


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24


விபரங்களுக்கு: https://admissions.annauniv.edu/cfa


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us