44 ஆண்டாகியும் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு | Kalvimalar - News

44 ஆண்டாகியும் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்புஜனவரி 16,2022,18:57 IST

எழுத்தின் அளவு :

கோவை: பாரதியார் பல்கலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.


கோவையில் பாரதியார் பல்கலை அமைக்க, வடவள்ளி, கல்வீரம்பாளையம், பொம்மணம்பாளையம், மருதமலை, மருதாபுரம், சுல்தானிபுரம் கிராமங்களைச் சேர்ந்த, 1,200 விவசாயிகளிடம் 925.84 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இஇதில், 799.67 ஏக்கர் நிலத்துக்கு இன்னும் இழப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. அப்போது, ஏக்கருக்கு 5,000 ரூபாய் முதல் 8,547 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.


குறைவான இழப்பீடு நிர்ணயித்ததால் வேதனை அடைந்த விவசாயிகள், கோவை சார்பு நீதிமன்றத்தில் 1983ல் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில், 2007 அக்., 29ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இழப்பீடு வழங்காமல் சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்தது. 


இடைக்கால தீர்ப்பாக, 71 கோடியே 4 லட்சத்து 78 ஆயிரத்து 426 ரூபாய் வழங்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. அரசு தரப்பில், 40 கோடியே, 27 லட்சத்து 47 ஆயிரத்து 754 ரூபாயை, கீழ் நீதிமன்றத்தில் &'டிபாசிட்&' செய்தனர். 30 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தாமல் பிடித்தம் செய்யப்பட்டது.


கடந்த 1977ல் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 44 ஆண்டுகளாகியும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காததால், நிற்கதியாய் நிற்கின்றனர். இவிவசாயம் செய்த நிலத்தை தாரைவார்த்ததால், பலரும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வறுமையில் பலர் இறந்து விட்டனர்.


பாதிக்கப்பட்ட விவசாயிகள், கோவையில் நடந்த, &'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்&' நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்தனர். &'தி.மு.க., அரசு அமைந்ததும், 100 நாட்களில் தீர்வு காண்பேன்&' என, ஸ்டாலின் உறுதியளித்துச் சென்றார். ஆட்சிக்கு வந்த பிறகும், இழப்பீடு வழங்க எவ்வித முயற்சியும் எடுக்காததால், முதல்வருக்கு நினைவூட்டு கடிதம் எழுதியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான கணேசன், 67, கூறியதாவது: எங்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தி, 44 ஆண்டுகளாகி விட்டது. இன்னும் முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை. நிலத்தை வழங்கியவர்களை வறுமையில் தள்ளியது பெரும் கொடுமை. ஐகோர்ட் கூறிய இழப்பீட்டை முழுமையாக வழங்காமல் பிடித்தம் செய்திருக்கின்றனர். அத்தொகையை விடுவித்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


&'காலம் கடத்துவது முறையல்ல&'


கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., நடராஜன், தமிழக அரசின் தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதம்: 


சட்டப்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும், சேர வேண்டிய இழப்பீடு தொகையையும், வட்டியையும் தராமல், பல ஆண்டுகளாக காலம் கடத்துவது முறையல்ல. வயது மூப்பு காரணமாக சிலர் இறந்து விட்டதால், அவர்களது குடும்பத்தினர் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை, இனியும் தாமதிக்காமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us