சென்னை: பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து முடிக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப் பட்டுள்ளது. தற்போது, 15 முதல் 18 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் சமீபத்தில் அதிகரித்துள்ளதால், பள்ளிகளில் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக, பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பொங்கலுக்கு பின், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இருந்தால், ஒன்றிரண்டு நாட்களில் அனைத்து மாணவ - மாணவியருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.