வனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா? இவற்றை எங்கே படிக்கலாம்? விபரம் தரவும். | Kalvimalar - News

வனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா? இவற்றை எங்கே படிக்கலாம்? விபரம் தரவும். டிசம்பர் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய விவசாய ஆய்வுக்கழகத்தின் பரிந்துரையின்படி வனவிலங்கியல் படிப்புகள் பாரஸ்ட்ரி எனப்படும் வனவியல் படிப்புகளில் ஒரு அங்கமாகத் தரப்படுகின்றன. வெர்டினரி மற்றும் அனிமல் ஹஸ்பண்ட்ரி ஆகிய பிரிவுகளின் நிபுணர்கள் வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் மிக முக்கியமான பங்காற்றி வருகின்றனர்.


வனவிலங்கியல் என்பது சில ஆண்டுகளாகத் தான் இயங்கி வரும் துறையாக விளங்குகிறது. முதலில் மதுராவில் தான் இத் துறை படிப்புகள் துவங்கப்பட்டன. வெடினரி கல்வியில் வனவிலங்கியல் படிப்பானது இப்போது எந்த நிறுவனத்தின் பாடத் திட்டத்திலும் இடம் பெறுவதாக இருக்கிறது. வெடினரி சயின்ஸ் படிப்பவருக்கும் கூட இப்போது வனவிலங்கியலை தனிச் சிறப்புப் பாடமாகப் படிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வனவிலங்கியலில் தேசிய டிப்ளமோ படிப்புகள் தரப்படுகின்றன.


அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பில் Housing, Rearing, Breeding, Nutrition, Restraint, Rehabilitation, Health Care(Disease Diagnosis, Treatment, Prevention, Wildlife Conservation), Eco Husbandry போன்ற பாடப்பகுதிகள் இடம் பெறுகின்றன. இத்துறையின் பட்ட மேற்படிப்புகளுக்கு போட்டித் தேர்வுகள் உண்டு. வனவிலங்கியல் துறை நிச்சயம் ஒரு சிறப்பான கல்விப் பிரிவு என்பதில் சந்தேகமில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us