யோகாவில் உலக சாதனை மாணவர்களுக்கு பாராட்டு | Kalvimalar - News

யோகாவில் உலக சாதனை மாணவர்களுக்கு பாராட்டுடிசம்பர் 06,2021,11:22 IST

எழுத்தின் அளவு :

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த, பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் எம்.ஜிதேந்திர சாய், 15. இவர், தலைகீழாக நின்று, உடல் முழுவதையும் இரு கைகளால் தாங்கக்கூடிய, பூர்ண விருச்சிகாசனத்தில் நின்றபடி, 30 வினாடிகளில், 28 முறை தண்டால் எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். 



அதே பள்ளியில், முதல் வகுப்பு பயிலும் ஹரினிதா, 5, என்ற மாணவி, கபோடாசனத்தில், தொடர்ந்து, 15 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்தார்.இருவரது உலக சாதனைகளும், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்&' மற்றும் ஆவ்சம் உலக சாதனை&' புத்தகங்களில் இடம் பிடித்தது.



சாதனை படைத்த மாணவர்கள், அவர்களுக்கு பயிற்சி அளித்த யோகா பயிற்றுனர் எஸ்.சந்தியா, ஆகியோருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,வுமான டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, முதல்வர் ஞானபிரகாசம் உட்பட பலர் பாராட்டினர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us