ஐரோப்பிய உதவித்தொகை | Kalvimalar - News

ஐரோப்பிய உதவித்தொகைடிசம்பர் 03,2021,05:57 IST

எழுத்தின் அளவு :

மெட்டீரியல் சயின்ஸ் சார்ந்த துறைகளில் முதுநிலை படிப்புகளுக்கான வாய்ப்புகளை சர்வதேச அளவில் விரிவாக்கும் படிப்பு, மமாசெல்ப் பிளஸ் !

முக்கியத்துவம்: ஐரோப்பிய உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும், மூன்றாம் நாடுகளுடனான இணக்கம் வாயிலாக கலாச்சாரங்களுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ’எராஸ்மஸ் முண்டஸ்’ திட்டத்தில் உதவித்தொகையுடன் இப்படிப்பு வழங்கப்படுகிறது.


இதன்வாயிலாக, மெட்டீரியல் சயின்ஸ், பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி ஆகிய பிரிவுகளில் 2 அல்லது 3 பல்கலைக்கழகங்களில் இரட்டை முதுநிலைப் பட்டப்படிப்பை பெற முடியும்.


படிப்பு காலம்: 2 ஆண்டுகள்


தகுதிகள்: மெட்டீரியல் சயின்ஸ் அல்லது அது சார்ந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஜியோ-சயின்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு. மேலும், டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., கேம்பிரிட்ஜ் இ.எஸ்.ஓ.எல்., போன்ற சர்வதேச ஆங்கில மொழிப்புலமை தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


பங்குபெறும் முக்கிய பல்கலைக்கழகங்கள்:


ரென்ஸ் பல்கலைக்கழகம் 1, பிரான்ஸ்

மாண்ட்பெல்லியர் பல்கலைக்கழகம், பிரான்ஸ்

டெக்னிஷ் பல்கலைக்கழகம் முன்சென், ஜெர்மனி

லுட்விக் மாக்சிமிலியன் பல்கலைக்கழகம், ஜெர்மனி

டொரினோ பல்கலைக்கழகம், இத்தாலி,

ஆடம் மிக்கிவிச் பல்கலைக்கழகம், போலந்து


உதவித்தொகை: அதிகபட்சம் 43 ஆயிரம் யூரோக்கள். இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய். போக்குவரத்து, இருப்பிடம், கல்விக்கட்டணம் ஆகிய செலவினங்கள் இதில் அடங்கும். 


விண்ணப்பிக்கும் முறை: http://application.mamaself.eu எனும் இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 10, 2022


விபரங்களுக்கு: www.mamaself.eu


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us