ஏமாறாதீர்கள்; ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தல் | Kalvimalar - News

ஏமாறாதீர்கள்; ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தல்டிசம்பர் 01,2021,16:55 IST

எழுத்தின் அளவு :

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் என்று போர்வையில், வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி, பொதுமக்களுக்கு அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

தாலுகா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை மண்டல அலுவலர்கள், மண்டல  அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து காலியிடங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் என்று போலி வேடமிட்டு மக்களை ஏமாற்றுவதாக புகார்கள் வந்துள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 


இது போன்ற பணியிடங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், அதிகாரப்பூர்வ இணையதளமான www.aicte-india.orgல் வாயிலாக மட்டுமே வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அத்தகைய போலி நபர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us