சிந்தனை திறனுள்ள இளைஞர்களை புதிய கல்வி கொள்கை உருவாக்கும் | Kalvimalar - News

சிந்தனை திறனுள்ள இளைஞர்களை புதிய கல்வி கொள்கை உருவாக்கும்நவம்பர் 30,2021,08:13 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சிந்தனை திறனுள்ள இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும், என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.

மதுரையில், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, பாரதிய சிக் ஷான் மண்டல் - பி.எஸ்.எம்., மற்றும் &'தினமலர்&' நாளிதழ் இணைந்து, தேசிய கல்விக் கொள்கை- 2020 என்ற கருத்தரங்கை நடத்தியது. தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார். பி.எஸ்.எம்., தலைவர் இளங்கோ ராமானுஜம் வரவேற்றார்.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும், வளரும் நாடுகள் பட்டியலில் தான் உள்ளோம். வளர்ச்சிக்கு அடிப்படையான கல்வி மேம்பாடு இல்லை. இதுவரை ஏழு கல்விக் கொள்கைகள் வெளியாகி, அமல்படுத்த முடியவில்லை. மனிதவள மேம்பாட்டில், 30 ஆண்டுகளாக 130வது இடத்தில் உள்ளோம். கல்வியில் போதிய சாதனைகள் இல்லாதது தான் இதற்கு காரணம்.திறமையில்லாத நிர்வாகம், ஊழல் போன்ற காரணங்களால், அறிவுசார் இளைஞர்கள் உருவாகவில்லை. மதிப்பெண் எடுக்க கற்றுக் கொடுக்கும் கல்வியே தற்போதுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பை கற்றுக் கொடுத்து, சிந்தனை திறன் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் கல்வி தான் தற்போது தேவை.விவசாயம் உட்பட அனைத்து துறைகளும் பின்தங்கியிருந்த நிலையில், பிரதமர் மோடியால் இந்நிலை மாறி வருகிறது. திறன்சார் பள்ளிக்கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, சிந்தனை திறனை வளர்க்கும் உயர்கல்வி என அனைத்து அம்சங்களும் என்.இ.பி.,யில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
வேலை வாய்ப்புடாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசுகையில், “படித்த வேலையில்லாத இளைஞர்கள், தவறான வழிகளில் செல்கின்றனர். இதை தடுக்க வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் பாடங்களை கல்வி நிறுவனங்கள் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியை துவங்கினேன்.&'&'இதையே தற்போதைய புதிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. திறமையான மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற அரசின் கனவை கல்வி நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்,&'&' என்றார்.டில்லி ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., தலைவர் கனகசபாபதி பேசுகையில், &'&'1830ல் 75 சதவீதம் கல்வியறிவு பெற்றிருந்தோம். ஆங்கிலேயர் வருகை, அவர்களது மெக்காலே கல்வி மூலம் நம்மிடம் இருந்த வலுவான கல்வி முறை சிதைக்கப்பட்டது. தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி, நாம் இழந்த கல்வி முறையை மீட்டெடுக்கும் வகையில் தான் என்.இ.பி., உள்ளது,&'&' என்றார்.பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் செல்வம் பேசுகையில், “தரமான கல்வி தான் நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் நிர்ணயிக்கிறது. தரமான ஆசிரியர் சமுதாயம் உருவாக வேண்டும். இதை நிறைவேற்றுவதாக என்.இ.பி., உள்ளது,” என்றார்.என்.இ.பி., தொடர்பான சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியை, மதுரைக் கல்லுாரி பொருளியல் துறை பேராசிரியர் தீனதயாளன் தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us