சென்னை: தமிழக கவர்னர் ரவியை, கிண்டியில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, இந்த மசோதாவை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார்.
மேலும் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள், தற்போதைய கோவிட் நிலவரம் குறித்தும் கவர்னர் மற்றும் முதல்வர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.