நீட் தேர்வு: அச்சம் வேண்டாம் மாணவர்களுக்கு அட்வைஸ் | Kalvimalar - News

நீட் தேர்வு: அச்சம் வேண்டாம் மாணவர்களுக்கு அட்வைஸ்நவம்பர் 27,2021,21:34 IST

எழுத்தின் அளவு :

வால்பாறை: &'நீட்&' தேர்வை கண்டு மாணவர்கள் ஒரு போதும் பயப்படக்கூடாது என, மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.



வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தர்சினி, மிதுனா, மகாலட்சுமி, துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா ஆகியோர், &'நீட்&' தேர்வில் வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கும், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும், பாராட்டுவிழா நடந்தது. 



அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் ஜெயலட்சுமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக வட்டார தலைவர் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.



&'நீட்&' தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பேசியதாவது:



வால்பாறை மலைப்பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே, &'நீட்&' தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டுகிறேன். ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் எடுக்க வேண்டும். &'நீட்&' தேர்வை கண்டு மாணவர்கள் ஒரு போதும் பயப்படக்கூடாது. 



தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் தாமாக முன் வந்து &'நீட்&' தேர்வுக்கு தயாராக வேண்டும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்க தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். &'நீட்&' தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற, கவனத்துடன் படிக்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.



விழாவில், அரசு பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் சிவன்ராஜ், ராபின்சன், முத்துவேல், மோனிகா, வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தங்கபாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us