சட்ட கல்லுாரி முதல் பட்டமளிப்பு | Kalvimalar - News

சட்ட கல்லுாரி முதல் பட்டமளிப்புநவம்பர் 27,2021,21:32 IST

எழுத்தின் அளவு :

திருப்போரூர்: புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில், 491 மாணவ - மாணவியருக்கு சட்ட அமைச்சர் ரகுபதி, பட்டம் வழங்கினார்.


திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி இயங்கி வருகிறது. இதன் முதலாவது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி பங்கேற்று, ஐந்தாண்டு சட்டப்படிப்பு முடித்த 491 மாணவ - மாணவியருக்கு, பட்டங்களை வழங்கி பேசினார்.


அமைச்சர் ரகுபதி பேசியதாவது: 


என் முதலாவது சட்டக் கல்லுாரி நிகழ்ச்சி இது. அதுவும் பட்டமளிப்பு விழாவாக இருப்பது மகிழ்ச்சி.கடந்த 1997ல் நாட்டிலேயே முதல் சட்ட பல்கலைக்கழகத்தை தி.மு.க., உருவாக்கி, அதற்கு டாக்டர் அம்பேத்கர் என பெயர் சூட்டப்பட்டது.


ஒரு குற்றவாளியை குற்றவாளி என நிரூபிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதே நேரத்தில் ஒரு குற்றவாளியை நிரபராதி என வாதாடும் பொறுப்பும் உள்ளது. இதில் எது உண்மை என்று கண்டுபிடிக்கும் தகுதியும் உங்களிடம் உள்ளது. அரசு வழக்கறிஞர்களாக வரலாம் அல்லது குற்றம் சாட்டப்பட்டோருக்கு வாதாடுபவராக வரலாம். ஆனால் நீதியை நிலைநாட்டக்கூடியவர்களாக நீங்கள் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us