தொழில்நுட்ப பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம் | Kalvimalar - News

தொழில்நுட்ப பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்நவம்பர் 27,2021,21:31 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: சென்னை கேப்ஜெமினி தகவல் நுட்ப நிறுவனம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களின் திறமை, தொழில்துறை மற்றும் கல்வித் தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையில், சென்னை கேப்ஜெமினி தகவல் நுட்ப நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 


சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், கேப்ஜெமினி நிர்வாக இயக்குனர் சந்திராரெட்டி, நிர்வாக முதல்வர் விவேகானந்தன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில், கேப்ஜெமினி துணைத் தலைவர் கீதாஞ்சலி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களும், நிறுவன சீனியர் இயக்குனர்களுமான கணேஷ் நமச்சிவாயம், சாமிநாதன் உடனிருந்தனர்.


புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சுமித்ரா ரங்கநாதன் ஒருங்கிணைத்தார். திட்ட மேலாளர் சவுரவ் நாராயண் பிஸ்வாஸ், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us