அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர்த்த ஆலோசனை | Kalvimalar - News

அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர்த்த ஆலோசனைநவம்பர் 27,2021,21:30 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது தொடர்பாக, மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் செயல்பாட்டுக்காக, ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. இலவச நலத்திட்டங்கள், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகள், தனியார் நிறுவனங்களின் நிதியுதவிகள் என, நிதி ஒதுக்கீடு மட்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.


அதற்கேற்ப அரசு பள்ளி களின் கல்வி தரத்தையும் உயர்த்த, பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்களுக்கு மாதந்தோறும், சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, நிர்வாக பணிகள் குறித்து அறிக்கை கேட்கப்படுகிறது.


இந்த கூட்டத்திற்கு பிறகும், அரசு பள்ளிகளில் பல்வேறு பிரச்னைகள் எழும் நிலையில், மண்டல அளவிலான கூட்டங்களை நடத்தி, பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதையொட்டி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


மண்டல வாரியாக இரண்டு நாட்கள் வீதம், டிச.,15 முதல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். தஞ்சாவூர், விழுப்புரம், திருநெல்வேலி, மதுரை, சேலம், காஞ்சிபுரம், கோவை ஆகிய இடங்கள், கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.


முதல் நாளில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கள ஆய்வு செய்வர். இரண்டாம் நாளில், பள்ளி கல்வி அமைச்சர், முதன்மை செயலர் பங்கேற்று ஆலோசனை வழங்குவர். இதில், சி.இ.ஓ.,க்கள், கள அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us