தமிழக இளைஞர்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள் | Kalvimalar - News

தமிழக இளைஞர்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள்நவம்பர் 27,2021,21:28 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'&'தமிழகத்தில் உள்ள மனிதவளத்தை, அறிவு சக்தியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நிறுவனங்களை வடிவமைக்க வேண்டும்,&'&' என, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். 


தமிழக அரசும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான, &'ஆழ் தகவல், நிலையான தொழில்நுட்ப சுற்றுச்சூழலை தமிழகத்தில் உருவாக்குதல்&' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கை நேற்று துவங்கின.


&'இன்டர்நெட்&'


நிகழ்ச்சியில், தமிழ்நாடு, &'தரவு மைய கொள்கை&' புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டார்.


பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


இன்றைய உலகில், &'இ&' என்ற ஓரெழுத்து மந்திரம் தான் உலகத்தை ஆட்சி செய்கிறது. எது இல்லாமலும் வாழ்ந்து விடலாம்; ஆனால் &'இன்டர்நெட்&' இல்லாமல் வாழ முடியாது என்ற சூழல், தற்போது உருவாகி உள்ளது. நாம் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டோம்.


கல்வி, போக்குவரத்து, மருத்துவம், பொழுது போக்கு துறை என, எந்த துறையாக இருந்தாலும், அவை, தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்தே இயங்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலத்திற்கு மிகப்பெரிய முன்னேற்றங்களையும், முதலீடுகளையும் கொண்டு வருவதில், தகவல் தொழில்நுட்பத்துறை முன்னிலை வகிக்கிறது.


இந்த துறையில், புதிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு, இந்த மாநாட்டில் உருவாக்கப்பட வேண்டும். பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்கள் புதிதாக மாற வேண்டும்; புதிய திறன்கள் உருவாக வேண்டும். இதன் வாயிலாக, வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரித்து, மாநிலமும், நாடும் பரவலாக வளர்ச்சி அடைய வேண்டும்.


தமிழகத்தில் உள்ள மனிதவளத்தை, அறிவு சக்தியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நிறுவனங்களை வடிவமைக்க வேண்டும். படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்பதோடு நிற்காமல், அறிவாளிகளும், திறமைசாலிகளுமே இதற்கு தேவை.திறமைசாலி, கூர்மையான அறிவுத்திறன் உடையவர்களாக தமிழக இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு, கூடுதலாக திறன் பயிற்சிகள் அளித்து, அவர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


முன்னணி மாநிலம்


தகவல் தொழில்நுட்ப துறையில், முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தத் துறையில், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, முதல் இடத்தை தக்க வைக்கவும், மேம்படுத்தவும், தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.


வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் நகர்ப்புற நடவடிக்கைகளுக்கு ஏற்ப, மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, புறவழிச்சாலைகள், மெட்ரோ ரயில் விரிவாக்கம், புதிய விமான நிலையம் போன்ற குறிப்பிடத்தக்க திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.


தகவல் தொழில்நுட்ப துறைகளில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். தொழில்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும், தமிழக அரசு வழங்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல், சைன்ட் நிறுவன துணை தலைவர் மோகன் ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us