சாதித்த மாணவர்களை கவுரவித்த அமைச்சர் | Kalvimalar - News

சாதித்த மாணவர்களை கவுரவித்த அமைச்சர்நவம்பர் 27,2021,21:27 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'சி.எஸ்.சி., ஒலிம்பியாட் - 2.0&' என்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றோருக்கு, அமைச்சர் மகேஷ், மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.


மத்திய அரசின் பொது சேவை மையம் வாயிலாக, நாடு முழுதும், &'சி.எஸ்.சி., ஒலிம்பியாட் - 2.0&' என்ற தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு, அவரவர் விரும்பும் பாடத்திற்கு ஏற்ப, &'ஆன்லைன்&' வாயிலாக பயிற்சியும், முடிவில் தேர்வுகளும் நடத்தப்பட்டன.


ஆங்கிலம் மற்றம் ஹிந்தி என இரண்டு மொழியிலும், இத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பெரம்பலுார் மாவட்டம், துங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ௯ம் வகுப்பு மாணவர் சதீஷ் இளவரசன், ஆங்கில பாடத்திற்கான போட்டித் தேர்வில் முதலிடம் பிடித்தார்.


அதே பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர் விக்னேஷ் ஏழுமலையும் முதலிடம் பிடித்தார். இருவரையும் பாராட்டி, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், மடிக்கணினி மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us