ஹார்வர்டு வழங்கும் ஆன்லைன் படிப்புகள் | Kalvimalar - News

ஹார்வர்டு வழங்கும் ஆன்லைன் படிப்புகள்நவம்பர் 24,2021,17:45 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்காவில் செயல்படும் ஹார்வர்டு வணிகப் பள்ளியுடன் இணைந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது. இதன்வாயிலாக, சர்வதேச புகழ்பெற்ற பெற்ற கல்விநிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே படிக்கும் வாய்ப்பை பெறலாம்.


படிப்பு: பிசினஸ் அனலிட்டிக்ஸ்

படிப்புகாலம்: 8 வாரங்கள் - சுமார் 40 மணிநேரம்

முக்கியத்துவம்: தொழில் துறையில் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அகையில், அடிப்படை தரவு பகுத்தலை மேற்கொள்வதற்கான பயிற்சி இப்படிப்பின் வாயிலாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2022


படிப்பு: சஸ்டைனபில் பிசினஸ் ஸ்ராட்டெஜி 

படிப்பு காலம்: 3 வாரங்கள்  - சுமார் 20 மணிநேரம்

முக்கியத்துவம்: தொழில்துறையில் மதிப்புமிக்க தலைவராக உயர தேவையான கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்கள் இப்படிப்பில் விளக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2022


படிப்பு: என்டர்பிரனர்ஷிப் எசென்ஷியல்

படிப்பு காலம்: 4 வாரங்கள்  

முக்கியத்துவம்: சரியான தொழில் வாய்ப்புகளை தேர்வு செய்வது முதல், சந்தையை மதிப்பிடுதல், சவால்களை கண்டறிதல், நிதிசார்ந்த முடிவுகளை எடுத்தல் உட்பட் பல்வேறு அம்சங்கள் இதில் கற்றுத்தரப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7, 2022


படிப்பு: பினான்சியல் அக்கவுண்டிங்

படிப்பு காலம்: 8 வாரங்கள் - சுமார் 60 மணிநேரம்

முக்கியத்துவம்: நிதி சார்ந்த பிரதான முடிவுகளை எடுக்கும் விதம் மட்டுமின்றி, முறையான நிதி திட்டமிடல், கணக்கிடுதல் உட்பட நிதி சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3, 2022


படிப்பு: எக்னாமிக்ஸ் பார் மேனேஜர் 

படிப்பு காலம்: 8 வாரங்கள் - சுமார் 60 மணிநேரம்

முக்கியத்துவம்: தொழில் துறையில் திறம்பட செயல்பட தேவையான பொருளாதார அறிவை பெரும் வகையில் இப்படிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7, 2022


குறிப்பு: இப்படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு &'ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூள் ஆன்லைன்’ கல்வி நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


விபரங்களுக்கு: https://b-u.ac.in/


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us