அரசு பள்ளியில் மழை நீர் தேக்கம் மாணவியர், ஆசிரியர்கள் அவதி | Kalvimalar - News

அரசு பள்ளியில் மழை நீர் தேக்கம் மாணவியர், ஆசிரியர்கள் அவதிநவம்பர் 24,2021,17:39 IST

எழுத்தின் அளவு :

எழும்பூர்: எழும்பூரில் உள்ள மாநில அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், மழை நீருடன் தேங்கியுள்ள கழிவு நீரால் மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


சமீபத்தில் கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை முழுதும் வெள்ளக்காடாக மாறின. பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புறச் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் பல சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறின. இதனால் சென்னை முழுதும் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பிரதான சாலைகளில் மழை நீரை அகற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஆனால், ஒரு சில சாலைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதேபோல் அரசு பள்ளிகள், விளையாட்டு மைதானங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. குறிப்பாக, எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநில அரசு பெண்கள் மேல்நிலை மாதிரிப் பள்ளியில் தேங்கிய மழை நீர் இதுவரை அகற்றப்படவில்லை. 


மாணவியர், ஆசிரியைகள் தேங்கிய மழைநீரை கடந்த செல்ல கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கற்களுக்கு மேல் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அனைவரும் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளியில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us