புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பிரசாரம் துவக்கம் | Kalvimalar - News

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு பிரசாரம் துவக்கம்நவம்பர் 24,2021,17:38 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் &' ஆண்டிமைக்ரோபியல் விழிப்புணர்வு வாரம் - 2021” என்ற பிரசார துவக்க நிகழ்ச்சி நடந்தது.பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் உள்ளிட்ட ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுகிறது.



இதனை தவறாக பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகள் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பை உருவாக்குகின்றன. இதுகுறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உலகளாவிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.



இதற்காக, உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 முதல், 24 வரை உலக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை, பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் தேவி பிரசாத், ஜோசப் செல்வின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us